'அழுகுரல்'
இடம் : சென்னை அரசு மருத்துவமனை
நேரம் : இரவு 11 மணிக்கு
அம்மா சிகிச்சைக்காக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த நேரம்.
இரவு உணவு முடித்து
மருத்துவமனை வளாகத்தில் நடமாடிக் கொண்டு இருந்தேன்.
இரவு 11 மணிக்கு மேல் சென்னை பெருநகரம் தன் ஆரவாரங்கள் அனைத்தும் அடங்கி அமைதி மூச்சினை
சுவாசிக்கத் தொடங்கி
சாலை விளக்குகள் மற்றும் போக்குவரத்து
விளக்குகள் விட்டு விட்டு
எரிந்து கொண்டிருக்க சாலைகளில் ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டும் பயணித்துக் கொண்டிருந்தது.
மருத்துவமனை உள்ளே
ஆம்புலன்ஸ் ஊர்தி சைரன் அலறியபடி வந்து அதில் இருந்து ஒரு நபரை ஸ்ட்ரெச்சரில் அவசரமாக தள்ளிக் கொண்டு விரைந்தனர்.
அந்தக் காட்சி கண்ணில் இருந்து மறைவதற்குள்
பிணவரை வாசலில்
ஒரு இளம்பெண் கதறி அழுதபடி அமர்ந்திருக்க அவளைச் சுற்றி ஒரு ஒன்றிரண்டு பேர் நின்றிருந்தார்கள்.
பின்பு அவர்களும் கலைந்து செல்ல
மேலும் இரண்டு பேர் தனியாக அழுதுகொண்டிருந்த
அந்த பெண்ணிடம் விவரம் கேட்டு விட்டு வந்தனர்.
அவர்கள் பேசிக் கொண்டதை கேட்டபோது
அந்தப் பெண் சமீபத்தில் தான் பெற்றோரை எதிர்த்து அந்த நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு வந்ததாகவும்
இருவரும் இங்கே வேலை பார்த்து வாழக்கையை தொடங்கி இருக்கிறார்கள்.
அப்படி இருக்க அந்த இரவு வேலையில் கணவன் வேலை முடிந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட பிரேதம் பிணவரை வந்தடைந்து அந்த பெண் செய்வதறியாது அழுதபடியே
பெற்றோரை எதிர்த்து
வீட்டைவிட்டு
காதலனை நம்பி வாழ
வந்த இடத்தில் கணவன் இறந்து போய் தான் அனாதையாக உதவிக்கு கூட யாருமில்லாமல் நிர்கதியாய் இருக்கும் நிலையை நினைத்து மார்பில் அடித்துக்கொண்டு
தேம்பித் தேம்பி கண்ணீர் விட்டு அழுதபடி
நின்ற காட்சியை அங்கு பார்த்தவர்கள் கண்டு வருத்தப்பட
பேசிக்கொண்டு சென்றார்கள்.
தான் நம்பி வந்த வாழ்வு தன் ஆதார நம்பிக்கையான கணவன் கண்முன்னே இறந்து கிடப்பதை பார்த்த அப்பெண்ணின் சோகத்தை அழுகுரல் அன்றி வேறென்ன சொல்லிவிட முடியும்.
அந்நிகழ்வு
ஒரு
மரணம்
அப்பெண்ணின் அழுகுரல்
அன்றய
இரவு தூங்க விடாமல்
கடக்க.
விடியற்காலை மீண்டும் ஒரு ஆம்புலன்ஸ் அவசரமாக சைரன் அலர குழந்தைகள் பிரசவ வார்டு பக்கம் செல்ல.
சில நிமிடங்களில்
அங்கே கேட்டது மீண்டும்
ஒரு
அழுகுரல்.
ஆனால் இம்முறை ஒரு ஜனனம்.
அந்த அழுகுரலினில் தான் எத்தனை ஆனந்தம்.
நமது அழுகுரலோடு
பிறந்து
பிறர் அழுகுரலோடு முடிகின்ற வாழ்க்கையில்..
அந்த குழந்தையின் அழுகுரல் போலவே
இந்த